சித்தர்கள் வரலாறு

                                     குருவருளோடு திருவருள் பெற வேண்டும்




யாக்கோபு, பூர நட்சத்திரம், அழகர் மலை , அழகர் கோவில், இராமதேவர் ஜீவ சமாதி, சித்தர் ஜீவ சமாதி
மகான் ஸ்ரீ ராமதேவ சித்தர்

இராமதேவ சரித மானஸே



தேவரிஷி வரத்தால் வந்த கமலமுனி பேரன் புலத்தியர் - இவரின் சீடர் இராமதேவர் - வைணவ குலத்தில் மாசி மாதம் மகம் அடுத்த பூரம் தனில் உதித்தவர்.

                                                                                
       சாந்த நிலை எனப்படும் அம்பிகை பக்தரான இவருக்கு அன்னையின் கருணையால் அதி சித்திகள் வாய்க்கப்பெற்றவர். அட்டமாசித்திகளைப் பெற்று பரவெளியில் இப்பிரபஞ்சம் முழுவதும் சுற்றி வரலானார்.இவ்வாறாக இருப்பது சஞ்சார சமாதி நிலை என்பர்.காசிக்கு சென்று விசுவநாதர் அருளால் கங்கையில் கிட்டிய லிங்கத்தை நாகப்பட்டிணத்தில் கொண்டு வந்து பிரதிட்டை செய்து வணங்கி வந்தார்.



       அரபு தேசம் சென்று மெக்காவில் அண்டக்கல்லை கண்டு வணங்கி தியானமுற்று இருக்கையில் அந்நாட்டவர்கள் எங்கள் மதத்தில் சேர்ந்தால் இரு. இல்லையென்றால் சென்று விடு என்று கூறியதால் இவரும் அங்கு சமாதியில் நிட்டையும் கைகூட இருக்க வேண்டிய நிலையானதால் மதம் தடையாக நிற்ககூடாது எனக் கருதி அம்மதத்தில் சேர்ந்து  யாக்கோபு என்று பெயர் சூடி இறை அருளால் குரு அருளால் அவர்கள் புனித நூலை ஒதுவித்து அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களால் மதிக்கதக்கவராக வாழ்ந்து மக்களின் அறியாமையை நீக்கியும் அவர்தம் பிணிகளைக் களையவும் பதினெட்டு சாத்திரங்களை (நூல்கள் அரபு மொழியில் பாடி வைத்தார்).



      இடையில் ஸ்ரீ போகரின் உபதேசப்படி அங்கு சமாதியுற்று பின் சதுரகிரியில் எழுந்து தவம் செய்து மெக்காவில் அரபியில் எழுதிய நூல்களை இராம தேவனாய் பாடி முடித்தார்.   



இயற்றிய நூல்கள் -

1.இராமதேவவைத்தியக்காவியம்
2.இராமதேவநிகண்டு  
3.இராமதேவஜாலம் 
4.இராமதேவகலைஞானம் 
5.இராமதேவ சிவயோகம் 
6.இராமதேவ பரிபாஷை 
7.இராமதேவ தண்டகம்  
8.இராமதேவ பட்சணி 
9.இராமதேவ பரஞான கேசரி 
10.இராமதேவ வைத்திய சூத்திரம் 
11.இராமதேவ சுத்திமுறை 
12.இராமதேவ அட்டாங்க யோகம் 
13.இராமதேவ முப்பூ சூத்திரம் 
14.இராமதேவ பரிபாஷை விளக்கம் 
15.இராமதேவ களங்கம்  
16.இராமதேவ வாத சூத்திரம்  
17.இராமதேவ வைத்திய சிந்தாமணி  
18.இராமதேவ வைத்தியம்.


     இவ்வாறு சதுரகிரியில் தங்கியிருந்ததால் அவ்வனத்திற்கு இராமதேவர் வனம் என்ற பெயரும் உண்டு. பின் மெக்கா சென்று மெளன சமாதியாகி வெளிப்பட்டு தமிழகத்தில் அழகர்மலையில் தீர்த்த தொட்டிக்கும் உயரத்தில் சதுரகிரியைப் பார்த்தபடி தானமர்ந்து இன்றளவும் மக்களுக்கு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பிறவிக்கு காரணமான கர்மவினைகளை வேரறுத்து சிவ போதகமாய் சித்தராய் அருளும் ஸ்ரீ இராமதேவரை தரிசனம் செய்வோம். ஆன்ம யோகத்தை அறிந்திட முயல்வோருக்கு அதை அடைவர்.



நாடி நவில்வது

“ நாடியது          கைகூடும்      நன்மையாவும் சேரும்

 தனமானதுதானேசேரும்         எண்ணமெல்லாம் ஈடேறும்

முன்னே           வினையும்       இம்மை தோடமும் கருகும்

வானகிரி      உரை இராம       தேவ புக நின்று துருமே

அருள்சித்த குருப்யோ நம

                                                        
நன்றி  - சித்தர் தாசன் , சீவ நாடி உரைஞர்

3 comments: